Home நாடு “மாட்டுத் தலை சம்பவம்”– பழனிவேல் கண்டனம்!

“மாட்டுத் தலை சம்பவம்”– பழனிவேல் கண்டனம்!

643
0
SHARE
Ad

Palanivelகோலாலம்பூர், ஜூன் 28 – பினாங்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என்.ராயர் வீட்டு வாசல் முன் உரிக்கப்பட்ட மாட்டுத் தலை போடப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

பொறுப்பற்ற நபர்களின் ஒழுங்கீனமான செயல் இது என அவர் வர்ணித்துள்ளார்.

“மலேசியாவில் இனங்களுக்கிடையில் பதட்டத்தை ஏற்படுத்தும் செயல்கள் இருக்கக்கூடாது. நமது பல இன சமுதாயத்தில் நாம் அனைவரும் மற்றவர்களின் சமயத்தை மதிக்க வேண்டும்” என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“பசு இந்துக்களின் புனித சின்னமாக கருதப்படுவது. அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும்” என்று பழனிவேல் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை பினாங்கு ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ராயர் வீட்டின் வெளிவாயில் கதவின் முன்னால் உரிக்கப்பட்ட மாட்டுத் தலை போடப்பட்டிருந்தது.