Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம்: பிரேசில் வெற்றி – பினால்டி கோல்கள் எண்ணிக்கையில்!

உலகக் கிண்ணம்: பிரேசில் வெற்றி – பினால்டி கோல்கள் எண்ணிக்கையில்!

660
0
SHARE
Ad

பெலோ ஹோரிசோண்டே (பிரேசில்), ஜூன் 29 – உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் சுற்றில் தேர்வு பெற்ற 16 நாடுகளுக்கு இடையிலான ஆட்டங்கள் இன்று தொடங்கின.

இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் சிலி ஆகிய இரண்டு தென் அமெரிக்க நாடுகள் மோதின.

ஆட்டம் முடிவடைந்தபோது இரண்டு நாடுகளுமே 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சரிசமமாக இருந்ததால், மேலும் 30 நிமிடங்கள்  கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரண்டு நாடுகளும் கோல் அடிக்க முடியாமல் திணறின.

#TamilSchoolmychoice

இறுதியில் பினால்டி கோல்கள் மூலம் வெற்றியாளரை நிர்ணயிக்கும் வகையில் ஆட்டம் தொடர்ந்தது.

இதில் ஒரு பினால்டி கோல் வித்தியாசத்தில் நூலிழையில் பிரேசில் வெற்றி பெற்று கால் இறுதி ஆட்டத்தில் நுழைகின்றது.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகள் இங்கே காணலாம்:

Brazil's head coach Luiz Felipe Scolari gestures during the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile.

தனது ஆட்டக்காரர்களுக்கு கட்டளையிடும் பிரேசில் நாட்டு பயிற்சியாளர் சோலாரி.

Chile's Francisco Silva (L) and Brazil's Neymar Jr (R) vie for the ball during the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 28 June 2014.

Thiago Silva (L) of Brazil in action during the FIFA World Cup 2014 round of 16 match between Brazil and Chile at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 28 June 2014.

படங்கள்: EPA