கான்பெரா, ஜூன் 29 – முடியாத மர்ம நாவலைப் போல் இன்னும் நீண்டு கொண்டே போகின்றது காணாமல் போன எம்எச் 370 மாஸ் விமான விவகாரம்.
கடந்த ஜூன் 26ஆம் தேதி ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் உள்ள நாடாளுமன்ற அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த, ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் வாரன் ட்ரஸ், இனிமேல் இந்தியப் பெருங்கடலின் புதிய சில பிரதேசங்களில் விமானம் குறித்த தேடுதல் வேட்டை தொடரும் என அறிவித்த காட்சியைத்தான் மேலே காண்கிறீர்கள்.
கடந்த மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் செல்லும் வழியில் 239 பயணிகளுடன் எம்எச் 370 மாஸ் விமானம் மாயமாக மறைந்தது.
உலக விமானப் போக்குவரத்து வரலாற்றில், எத்தனையோ விமான விபத்துகள், தேடுதல் வேட்டைகள் நடந்தேறியிருக்கின்றன.
ஆனால், இத்தனை சர்ச்சைகள், சந்தேகங்கள், மாறுபட்ட கருத்துகள், முரண்பட்ட தகவல்கள் – ஆகியவற்றோடு இப்படியோரு விவகாரம் இதுவரை உருவெடுத்ததில்லை.
இதுபோன்று இனியும் நடைபெறுமா என்பதும் சந்தேகம்தான்!
படங்கள் : EPA