Home உலகம் உக்ரைன் தலைவர்களைத் தூண்டிவிடும் அமெரிக்கா – ரஷ்யா குற்றச்சாட்டு! 

உக்ரைன் தலைவர்களைத் தூண்டிவிடும் அமெரிக்கா – ரஷ்யா குற்றச்சாட்டு! 

459
0
SHARE
Ad

russia-us-flagsமாஸ்கோ, ஜூன் 30 – உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷ்யாவை விரோதப்போக்குடன் நடத்துவது மட்டும் அல்லாமல் உக்ரைனையும் தூண்டி விடுகின்றது என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரித்ததாவது, “உக்ரைன் தலைவர்களைத் தூண்டி விட்டு அவர்களை ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபடச் செய்யும் முனைப்பில் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

உக்ரைன் விவகாரம் விரைவில் முடிவுக்கு வருவது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்ததுள்ளது” என்று தெரிவித்தார். இதற்கிடையே, உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடனான போர் நிறுத்தத்தை திங்கள்கிழமை வரை நீட்டிப்பதாக அந்நாட்டு அதிபர் பெட்ரோ போரோஷென்கோ அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் கூறுகையில், “இந்த போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பை பயன்படுத்தி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களும் போரோஷென்கோ அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.