Home இந்தியா ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமர் மோடியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

554
0
SHARE
Ad

modi,ஐதராபாத், ஜுன் 30 – இந்திய விண்வெளிக் ஆராய்ச்சி முகமையை சேர்ந்த விஞ்ஞானிகள் பி.எஸ்.எல்.வி. –சி 23 என்ற ஏவுகனையை தயாரித்துள்ளனர்.

இந்த ஏவுகனை இன்று காலை 9.52 மணிக்கு ஆந்திர மாநிலம், நெலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருகை தந்தார். அங்குள்ள ஓய்வு விடுதியில் தங்கியுள்ள பிரதமரை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்றிரவு சந்தித்து பேசினார்.

#TamilSchoolmychoice

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கூறி வரும் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் போது மத்திய அரசு வழங்குவதாக அறிவித்த சலுகைகள் மற்றும் மாநிலத்தின் முன்னேற்றம் தொடர்பாக பிரதமருடன் ஆலோசனை நடத்தியதாக தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.