Home கலை உலகம் திருமதியான விஜய் டிவி ‘டி.டி’: மீண்டும் தொகுப்பாளினியாக வருவாரா?

திருமதியான விஜய் டிவி ‘டி.டி’: மீண்டும் தொகுப்பாளினியாக வருவாரா?

760
0
SHARE
Ad

d.dசென்னை, ஜூன் 30 – தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி(எ) டிடி தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான  திவ்யதர்ஷினி(எ) டிடியை தெரியாத தொலைக்காட்சி ரசிகர்கள் இருக்க முடியாது. அம்மாடி இந்த டிடிக்கு வாயே வலிக்காதா இப்படி தொடர்ந்து பேசுகிறாரே என்று வியப்பவர்கள் ஏராளம்.

அப்படி தனது படபட பேச்சால் ரசிகர்களை பெற்ற டிடியின் வாழ்வில் நேற்று முக்கிய தினம். டிடிக்கும் அவரது நீண்டகால நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் பெரியோர்களால் நிச்சயித்தபடி நேற்று திருமணம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

திருமதியான டிடிக்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டிடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் அவ்வப்போது படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வருவாரா என்பது தற்போது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வருவீர்களா? என்று டி.டியிடம் கேட்டதற்கு பதில் ஏதும் கூறவில்லை. எப்படியோ இல்லறம் என்னும் நல்லறத்தில் இணைந்துள்ள டிடி, ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள்.