Home வணிகம்/தொழில் நுட்பம் இராணுவத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு தயாராகி வரும் இந்தியா! 

இராணுவத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு தயாராகி வரும் இந்தியா! 

475
0
SHARE
Ad
indian_army_reuters_ppp

புதுடெல்லி, ஜூன் 30 – உலகின் மிகப் பெரும் வர்த்தக சந்தையாக கருதப்படும் இந்தியாவில், தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், உலக அரங்கில் வர்த்தக ரீதியா பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

முன்னணி நாடுகள், இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவினைப் பலப்படுத்த தயாராகி வருகின்றன. குறிப்பாக, இந்திய இராணுவத்தில் நேரடி அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கப் போவதாக இந்திய பிரதமர் மோடி அறிவித்த நிலையில், பல்வேறு நாடுகளின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தியாவிற்கு வருகை புரிந்து வருகின்றனர்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரண்ட் பேபியஸ் இன்று இந்தியா வருகிறார். அவர் இந்தியாவுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 126 ரபேல் ரக போர்விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும், அடுத்த வாரத்தில் அமெரிக்காவின் செனட் உறுப்பினர் ஜான் மெக்கைன், அவரைத் தொடர்ந்து ஜூலை இரண்டாவது வாரத்தில்  பிரிட்டனின் வெளியுறவு செயலர் வில்லியம் ஹக், நிதி அமைச்சர்  ஜார்ஜ் ஆஸ்பர்ன் ஆகியோரும் இந்தியாவிற்கு வர இருக்கின்றனர்.