பெய்ஜிங், ஜூலை 01 – தீவிரவாதத்திற்கும், கடல் கொள்ளைகளுக்கும் பெயர் பெற்ற சோமாலியா நாட்டை, உலக நாடுகள் பல காலம் தங்கள் தொடர்பு எல்லைகளில் இருந்து விலக்கி வைத்து இருந்தன. ஐ.நா.சபையின் சீரிய முயற்சிகளினாலும், நேரடி கண்காணிப்புகளாலும் நிலைமை கட்டுக்குள் இருந்து வருகின்றது.
இந்த நிலையில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டு இருந்த சீன தூதரகத்தை மீண்டும் திறக்க சீனா முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட 23 வருடங்களாக மூடப்பட்டுள்ள தூதரகத்தை இரு நாட்டு தூதர்களின் பேச்சுவார்த்தைக்கு பின் திறக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்து குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளரான கூறுகையில், “21 வருடங்களுக்கு பிறகு அந்நாட்டில் புதிய அரசு அமைந்துள்ளதால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. அந்நாடு அமைதிக்கான நடவடிக்கையில் பஅடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதனால் சீன-சோமாலிய உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்” என்று கூறியுள்ளார்.
1991 ஆம் ஆண்டில் அந்நாட்டை நீண்ட காலமாக ஆண்ட சர்வாதிகார அரசு வீழ்த்தப்பட்டதையடுத்து அங்கிருந்த சீன தூதரகம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.