ராவல்பிண்டி, ஜூலை 01 – பாகிஸ்தானில் அரசு வரம்பிற்கு உட்படாமல் போலியான முறையில் இயங்கி வந்த 23 தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை அரசு அதிரடியாக மூடியுள்ளது.
கடந்த 5 மாதங்களாக மருத்துவத்துறை ஆய்வாளர்கள் பல்வேறு தனியார் மருத்துவமனை மற்றும் மருந்தகங்களை சோதனை செய்ததில், அரசின் விதிகளை மீறி போலியான மாத்திரைகள் தயாரிக்கப்பட்டும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டும் வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் 23 தனியார் மருத்துவமனைகளை அரசு அதிரடியாக மூடியுள்ளது. அப்போது 4 மில்லியன் அளவிளான போலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
45 பேர் மீது அனுமதி இல்லாமல் மாத்திரைகள் விற்றதாக குற்றம்சாட்டது. இதுதொடர்பான 92 வழக்குகளில் நீதிமன்றம் அவர்களுக்கு அபராதம் விதித்தது. மேலும் 35 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அபராதத்தொகையும் கடும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.