சால்வடோர், ஜூலை 2 – உலகக் கிண்ணப் போட்டிகளில், இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 16 நாடுகளுக்கிடையிலான போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இன்று மலேசிய நேரப்படி அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் பெல்ஜியமும் அமெரிக்காவும் மோதின.
90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்த போது இரண்டு நாடுகளும் கோல் எதுவும் அடிக்காத நிலையில் ஆட்டத்திற்கு கூடுதலான 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
இந்த கூடுதல் நேரத்தில், முதல் 15 நிமிடங்களுக்குள்ளாக பெல்ஜியம் இரண்டு கோல்களை அடித்து, கால் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றதோடு, அமெரிக்காவின் காற்பந்து கனவுகளையும் சிதைத்தது.
இருப்பினும் விட்டுக் கொடுக்காமல் விளையாடிய அமெரிக்கா, கூடுதல் நேரத்தின் இரண்டாவது 15 நிமிடத்தில் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை 2-1 என்ற நிலைமைக்கு உருவாக்கியது.
அந்த ஆட்டத்தின் சில காட்சிகளை இங்கே காணலாம்:-
படங்கள்: EPA