துபாய், ஜூலை 2 -ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய விமான நிறுவனமான எட்டிஹாட், இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்களை இயக்க இருப்பதாக நேற்று அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய வர்த்தக நகரங்களான கொச்சி, பெங்களூர், சென்னை, கோழிக்கோடு மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு, பயணிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க கூடுதல் விமான சேவை வழங்க இருப்பதாக எட்டிஹாட் ஏர்வேஸ் கூறியுள்ளது.
அதன்படி சென்னை, பெங்களூர் மற்றும் கோழிக்கோட்டிற்கு நேற்று முதல் இருமுறை விமானங்கள் இயக்கப்பட்டன. இதேபோல் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து ஐதராபாத்துக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எட்டிஹாட் ஏர்வேஸ் கூறுகையில், “கூடுதல் விமான சேவையின் மூலம் பயணிகள், பகல் நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள முக்கிய வர்த்தக பகுதிகளுக்கான தொடர்பை எளிதாக மேம்படுத்திக்கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது.