Home வணிகம்/தொழில் நுட்பம் ஆடம்பரமான பயணிகள் ஜெட் விமானங்களை வெளியிடுகிறது எட்டிஹாட் நிறுவனம்!

ஆடம்பரமான பயணிகள் ஜெட் விமானங்களை வெளியிடுகிறது எட்டிஹாட் நிறுவனம்!

525
0
SHARE
Ad

140505093847-1-ethiad-the-residence-horizontal-galleryஅபுதாபி, மே 6 – மத்திய கிழக்கு நாடுகளின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான எட்டிஹாட் ஏர்வேஸ், தங்கள் விமானத்தில் பயணம் செய்யும் முதல் வகுப்பு பயணிகளுக்கு, புதிய பயண அனுபவத்தை ஏற்படுத்த, கூடுதல் வசதியினை அதிகரிக்க உள்ளது.

எட்டிஹாட் நிறுவனம் நீண்ட தூர விமானங்களில் பயணிக்கும் முதல் வகுப்பு பயணிகளுக்கு, குளியலறை வசதியுடன் கூடிய தனி அறைகளை அறிமுகப்படுத்த இருக்கின்றது. மேலும், அவர்களுக்கென பிரத்தியேகமான பணி உதவியாளர்களும் நியமிக்கப்படுவர். இத்தகைய பயணங்களில் ஏற்கனவே முதல் வகுப்பு பயணிகளுக்கென தனி சமையல் வசதியும், பணிப்பெண் வசதியும் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

புதிதாக உருவாக்கப்படும் தனியறை வசதிகள் பயணிகளைக் கவரும். இதன் மூலம் வர்த்தகத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என எட்டிஹாட் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் ஹோகன் கூறியுள்ளார். இவர்களின் போட்டி நிறுவனமான ஏர்பஸ் ஏ380 தங்களின் இரட்டை அடுக்கு விமானங்களில் இந்த வசதியினை, தற்போது அளித்து வருகின்றது.

#TamilSchoolmychoice

டிசம்பர் மாதம் முதல் இந்த புதிய வசதி அறிமுகமாகின்றது. அதன் முதல் பயணம் அபுதாபியிலிருந்து லண்டனுக்கு இயக்கப்படும் என்று அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் ஒரு வழி கட்டணத் தொகை 21,000 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.