Home நாடு எல்சிசிடி விமான நிலையத்தில் பயணிகள் அவதி – கூச்சல் குழப்பம்! காரணம், குடி நுழைவுத் துறையா?...

எல்சிசிடி விமான நிலையத்தில் பயணிகள் அவதி – கூச்சல் குழப்பம்! காரணம், குடி நுழைவுத் துறையா? ஏர் ஆசியாவா?

522
0
SHARE
Ad

airasiaசிப்பாங், மே 5 – எதிர்வரும் மே 9ஆம் தேதியன்று மூடப்படவிருக்கும் சிப்பாங்கிலுள்ள எல்சிசிடி மலிவு விலை விமான நிலையத்தில் நேற்று சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். கூச்சல் குழப்பம் நீடித்த வேளையில் பலர் மயங்கி விழுந்தனர்.

#TamilSchoolmychoice

புதிய 2வது விமான நிலையம் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பணியாளர்  பற்றாக் குறையால், ஒரு சில குடிநுழைவு  முகப்பிடங்கள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கும், நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கவேண்டிய அவல நிலைமைக்கும் உள்ளாகியதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

சிலர் மயக்கம் போட்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் மாலை 4.00 மணியளவில் நிகழ்ந்தது.

கூட்ட நெரிசலினால் போதுமான காற்று வசதியில்லாததால் புழுக்கம் ஏற்பட்டதாகவும். அதிகமான குடிநுழைவு முகப்பிடங்கள் திறக்கப்படும் வரை சுமார் 1 மணி நேரம் வரையில் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக அங்கிருந்த பயணிகள் தெரிவித்தனர்.

இங்கு பாதுகாப்புக்கு காவல்துறையினர் கூட இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

இந்தக் கூட்டத்தில் சிக்கிக் கொண்டவர்களில் ஒரு முக்கிய பிரமுகரும் அவரது குடும்பத்தினரும் இருந்தனர்.

அங்கிருந்து அவர் விடுவிக்கப்பட்டு சிறப்பு வாயிலில் கொண்டு செல்லப்பட முயன்ற போது அங்கிருந்த மற்றவர்கள் கூச்சலிட்டனர்.

“நாங்களும்தான் வரிப்பணம் செலுத்துகிறோம். அவருக்கு மட்டும் என்ன சிறப்பு சலுகையா” என்று கத்தி கூச்சலிட்டு, இது மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட்டின் தவறு என்று சத்தமாகக் கூறினர்.

இதற்கிடையில், நேற்று எல்சிசிடி விமான நிலயத்தில் நேர்ந்த குழப்பங்களுக்குக் காரணம் ஏர் ஆசியாதான் என குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் அலோயா மாமாட் கூறினார்.

மற்ற விமான நிறுவனங்கள் மே 2ஆம் தேதி முதல் புதிய 2வது விமான நிலையத்திற்கு தங்களின் நடவடிக்கைகளை மாற்றிவிட்ட நிலையில் ஏர் ஆசியா மட்டும் எதிர்வரும் மே 9ஆம் தேதி வரை தனது நடவடிக்கைகளை புதிய விமான நிலையத்திற்கு மாற்றுவதை ஒத்தி வைத்தது என அலோயா தெரிவித்தார்.