நியூயார்க், ஜூலை 2 – இந்தியா உட்பட உலகின் முக்கிய நாடுகளில் உள்ள தேசிய அரசியல் கட்சிகளை அமெரிக்கா உளவு பார்த்ததாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திக்கை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“நீதிமன்றத்தின் அனுமதியுடன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு 2010-ம் ஆண்டில், இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி, லெபனானின் அமல், வெனிசுலாவில் இயங்கிவரும் முக்கிய கட்சி, எகிப்தின் முஸ்லீம் சகோதர கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 5 முக்கிய சர்வதேச அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளை உளவு பார்த்தது” என்று தெரிவித்துள்ளது.
இந்த அரசியல் கட்சிகளை அமெரிக்கா உளவு பார்த்ததற்கான ஆதாரங்களை அமெரிக்காவின் முன்னாள் உளவாளியான ஸ்னோடென் வெளியிட்டுள்ளார். அந்த ஆதாரங்களை குறீபிப்பிட்டு வாஷிங்டன் போஸ்ட செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் மோடியுடன் அமெரிக்கா நல்லுறவை வளர்க்க நினைக்கும் நிலையில், அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியை அமெரிக்கா உளவு பார்த்ததாக வந்துள்ள தகவல்களால் இருநாடுகளின் உறவு பதிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.