Home கலை உலகம் விஜய்-அஜீத் ஒன்றாக நடிக்க சம்மதித்தால் நான் இயக்கத் தயார்! – ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்-அஜீத் ஒன்றாக நடிக்க சம்மதித்தால் நான் இயக்கத் தயார்! – ஏ.ஆர்.முருகதாஸ்

674
0
SHARE
Ad

ajith-and-vijayசென்னை, ஜூலை 2 – அஜீத் மற்றும் விஜய் ஒன்றாக சேர்ந்து நடிக்க சம்மதித்தால் அவர்களை வைத்து படம் எடுக்க தான் தயாராக உள்ளதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

vijayajith1995-ஆம் ஆண்டில் வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் தான் விஜய் மற்றும் அஜீத் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு அவர்கள் சேர்ந்து நடிக்கவே இல்லை.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் வைத்து படம் தயாரிக்க தான் தயார் என்று திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் தெரிவித்திருந்தார். வெங்கட் பிரபு அஜீத் மற்றும் விஜய்யை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கியதாக கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

vijay-ajith-mankathaஆனால் அவர் தற்போது சூர்யாவை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். விஜய் மற்றும் அஜீத் ஆகியோரை ஒரு படத்தில் நடிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

விஜய்யும், அஜீத்தும் ஒன்றாக சேர்ந்து நடிக்க தயாராக இருந்தால் அந்த படத்தை இயக்க நான் ரெடி. அவர்கள் சம்மதம் மட்டும் தெரிவித்தால் போதும். 2 மாதங்களில் கதையை தயார் செய்துவிடுவேன் என்கிறார் முருகதாஸ்.

vijay-ajithவிஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முருககதாஸின் முதல் படமான தீனாவின் கதாநாயகனே அஜீத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.