Home கலை உலகம் வரும் 5-ஆம் தேதி தமிழ் நடிகர்-நடிகைகளுக்கு ஸ்டார் விஜய் விருதுகள்!

வரும் 5-ஆம் தேதி தமிழ் நடிகர்-நடிகைகளுக்கு ஸ்டார் விஜய் விருதுகள்!

631
0
SHARE
Ad

Vijay Awardsசென்னை, ஜூலை 3 – சிறந்த நடிகர், நடிகைகளுக்கு ஆண்டு தோறும் விஜய் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடத்துக்கான விஜய் விருதுகள் வழங்கும் விழா வரும் 5-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

நடிகர், நடிகைகள், சிறந்த இயக்குனர்கள், புதுமுக நட்சத்திரங்கள், சிறந்த படங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் என பல சாதனையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகிறது.

vijசிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் இயக்குநர் ரவி.கே.சந்திரன், பிரதாப் போத்தன், யூகிசேது, நடிகை சிம்ரன் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் அனைத்து படங்களையும் பார்த்து சிறந்த படங்களை தேர்வு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ரசிகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரசிகர்களுக்கு பிடித்த நடிகைகள் போட்டியில் திரிஷா, நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, அமலாபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Vijay Awards,பிடித்த நடிகர்கள் போட்டியில் கமலஹாசன், விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், உள்ளிட்டோர் இருக்கிறார்கள். திரையுலகின் சாதனையாளருக்கு இவ்விழாவில் செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் இவ்விருதை கமலஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், இயக்குநர் பாலச்சந்தர், எஸ்.பி.பாலசுப்பிரமணியனம், இந்தி நடிகர் ஷாருக்கான் போன்றோர் பெற்றுள்ளனர். எட்டாவது ஆண்டாக இந்த முறையாக இவ்விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.