Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் சிறந்த வங்கிகளுக்கான பட்டியல்: மலாயன் வங்கிக்கு 20-வது இடம்!

உலகின் சிறந்த வங்கிகளுக்கான பட்டியல்: மலாயன் வங்கிக்கு 20-வது இடம்!

455
0
SHARE
Ad

maybankகோலாலம்பூர், ஜூலை 4 – மலேசியாவின் மிகப்பெரிய வங்கிகளுள் ஒன்றான  மலாயன் வங்கி (Maybank), உலக வங்கிகளுக்கு இடையே மீண்டும் தனது ஆளுமையை நிரூபித்துள்ளது.

உலக அளவில் வர்த்தக செயல்பாடுகளில் முழுமையான ஆளுமையும், மக்களின் மனதில் தீர்க்கமான நம்பிக்கையும் கொண்ட வங்கிகளுள், மலாயன் வங்கி வங்கிக்கு 20-வது இடம் கிடைத்துள்ளது.

‘ப்ளூம்பெர்க் மார்கெட்ஸ்’ (Bloomberg Markets) எனும் மாத இதழ், சர்வதேச அளவில் பெயர்பெற்ற வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உலக வர்த்தக சந்தைகள் பற்றிய ஆய்வுகளை நடத்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றது. நடப்பு ஜூலை-ஆகஸ்ட் மாதத்திற்கான இதழில், உலக அளவில் சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தி, வலுவான அடித்தளத்துடன் இருக்கும் வங்கிகளைப் பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் மலேசியாவின்  மலாயன் வங்கிக்கு தென் கிழக்கு ஆசியாவில் 4-வது இடமும், உலக அளவில் 20-வது இடம் கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

தொடர்ந்து இந்த பட்டியலில் இடம் பெற்று வரும் மலாயன் வங்கி, இந்த இதழால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் மலேசிய வங்கியாகும். சர்வதேச அளவில் 97 வங்கிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மலாயன் வங்கியின் மொத்த மதிப்பு கடந்த மார்ச் மாதத்தின் படி, 578 பில்லியன் ரிங்கேட்கள் ஆகும். இந்த பட்டியலில் சீனாவின் ‘ஹங் செங் வங்கி’ (Hang Seng Bank) முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.