இதில் 5 பேர் ஜப்பானுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மீதி 8 பேர் மரணம் அடைந்து விட்டனர். இதை 2002-ம் ஆண்டு வடகொரியா அறிவித்தது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
எனினும், இந்தக் கடத்தல் விவகாரம் தொடர்பான விசாரணையை மீண்டும் நடத்தினால், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள சில தடைகள் அகற்றப்படும் என சில மாதங்களுக்கு முன்பு ஜப்பான் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், வடகொரியா மீதான சில தடைகளை விலக்கிக்கொள்ள விரும்புவதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஜப்பானிலிருந்து வடகொரியாவுக்கு செல்வதற்கும், வடகொரியாவிலிருந்து ஜப்பானுக்கு வருவதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை முதலில் அகற்றப்படுகின்றது. இரு நாடுகளின் உறவில், இது ஒரு தொடக்கம் தான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த தடை நீக்கம், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வடகொரியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது.