இந்த ஐந்து நட்சத்திர விடுதியில் தொழிலதிபர் ஒருவர் அது கட்டப்பட்டத்தில் இருந்து 36 ஆண்டுகளாக தங்கி, பின் அங்கேயே 71 வது வயதில் மரணமும் அடைந்திருக்கிறார்.
அவரது பெயர் தாதி பல்சாரா (படம்). சிங்கப்பூர் வாழ் இந்தியரான அவர் சீனப் பெண் ஒருவரை கல்யாணம் செய்து கொண்டார். 1978-ஆம் ஆண்டில் டில்லி வந்த தாதி பல்சாரா, தாஜ் ஹோட்டலின் 901 எண் அறையில் தங்கியிருந்தார். ‘ஹிமாலயன் நேச்சுரல் மினரல் வாட்டர்’ என்ற நிறுவனத்தை நிறுவி அதை உலக அளவில் புகழ் அடையச் செய்தார்.
பின்னர், அந்நிறுவனத்தை கடந்த 2001 –ம் ஆண்டு டாடா நிறுவனத்திற்கு விற்றார்.
வாரிசு இல்லாத தாதி பல்சாரா, கடந்த 2009-ம் ஆண்டு தன் மனைவி இறந்ததும், நீரழிவு மற்றும் இதயப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த தாதி பல்சாரா தனியாகவே அந்த ஹோட்டலில் வாழ்ந்து வந்தார்.
தொடர்ந்து அந்த ஹோட்டலிலேயே தங்கியதால், அந்த விடுதி நிறுவனம் அவருக்கு ஒரு நாள் தங்குவதற்கு 15 ஆயிரம் ரூபாயை வசூலிக்கும்படி சலுகை அளித்தது.
அந்த ஹோட்டலிலை தன் சொந்த வீடாகவே கருதி தன் இறுதி நாட்களை கடத்திய தாதி, தன்னிடம் இருந்த காசை எல்லாம் அந்த ஹோட்டல் ஊழியர்களுக்காக வாரி இறைத்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 21 –ம் தேதி தாதி பல்சாரா அவரது அறையில் இறந்து கிடந்தார்.
அவரின் மறைவை அந்த ஹோட்டல் ஊழியர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு வருந்தியுள்ளனர்.