ஃபோர்ட்டலெசா, (பிரேசில்), ஜூலை 5 – இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 4.00 மணிக்குத் தொடங்கிய பிரேசில்-கொலம்பியா குழுக்களுக்கு இடையிலான கால் இறுதிப் போட்டிக்கான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில் பிரேசில் ஒரு கோல் போட்டு முன்னணியில் இருந்தது.
வழக்கத்தை விட மாறாக பிரேசில் அணியினர் வெறித்தனமான ஆட்டத்தை – அதுவும் விரைந்த வேகத்தோடு வெளிப்படுத்தினர்.
எந்த நிலையிலும் பந்தை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது, கொலம்பியாவிடம் தோற்றுவிடக் கூடாது என்பது போல் அவர்களின் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில், பிரேசிலின் டேவிட் லுயிஸ் அடித்த ஃபிரி கிக் பந்து அற்புதமாக கொலம்பியா கோல் கம்பத்தில் நேரடியாக நுழைந்து கோலாக, பிரேசில் 2-0 என்ற நிலையில் தெளிவான வெற்றி வாய்ப்போடு முன்னணியில் இருந்தது.
ஆனாலும், கொலம்பியாவுக்கு கிடைத்த பினால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கொலம்பியாவின் முன்னணி ஆட்டக்காரர் ஜேம்ஸ் ரோட்ரிகுயஸ் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் ஏறத்தாழ பத்து நிமிடங்கள் எஞ்சியிருந்த வேளையில் 2-1 என்ற நிலைமைக்கு வந்தது.
பிரேசில் – கொலம்பியா ஆட்டத்தின் படக் காட்சிகள்:
படங்கள்: EPA