Home உலகம் இந்தியர்களை மீட்க உதவியது சதாம் உசேனின் பாத் கட்சியினர்!

இந்தியர்களை மீட்க உதவியது சதாம் உசேனின் பாத் கட்சியினர்!

476
0
SHARE
Ad

sadham_helps_india_001ஈராக், ஜூலை 7 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் ஈராக்கில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க சதாம் உசேனின் பாத் கட்சியினர்தான் இந்திய அரசுக்கு உதவி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியர்களை மீட்பதில் ஈராக் அரசும், ஈராக் ராணுவமும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தராததால், மறைந்த சதாம் உசேனின் பாத் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இந்திய அரசே நேரடியாக தொடர்பு கொண்டு இதனை செய்து முடித்துள்ளது.

இதற்கான முயற்சிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், பிரதமர் அலுவலகமும் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்தியா மீது மதிப்பு வைத்துள்ள சதாம் உசேனின் கட்சியினர் செவிலியர்கள் உள்ளிட்டோரை மீட்டதில் பெரும் பங்கு வகித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

india_reutersஇந்நிலையில், தீவிரவாதிகளின் பிடியில் இன்னும் 39 இந்தியர்கள் சிக்கியிருப்பதால், இந்தியர்களை மீட்க இந்திய அரசு எப்படி செயல்பட்டது, என்ன நடந்தது என்பது குறித்து எந்த விவரத்தையும் மத்திய அரசு இதுவரை வெளிடவில்லை.

மேலும், பாத் கட்சியினர் இந்தியா மீது மதிப்பு வைத்திருப்பதற்கு காரணம், சதாமின் நண்பராக இந்தியா செயல்பட்டதால் அவர்களை அணுகி இந்திய அரசு உதவி கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.