Home உலகம் ஜப்பானை தாக்க வரும் அதிவேக புயல்!

ஜப்பானை தாக்க வரும் அதிவேக புயல்!

518
0
SHARE
Ad

super-typhoon-usagiடோக்கியோ, ஜூலை 8 – ஜப்பான் நாட்டின் தென் பகுதியை இன்று அதிவேக புயல் தாக்க இருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மாயம் எச்சரித்து உள்ளது.

ஜப்பான் நாட்டின் தெற்கு ஒகினாவா தீவின் கடல் பகுதியில், அதிவேக புயல் ஒன்று உருவாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

‘சூப்பர் தைபூன்’ ( super typhoon) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஜப்பானின் கியூசூ பகுதியை நோக்கி மணிக்கு 250 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடிய இந்த புயல் இன்று காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற புயல் கடல் பகுதியில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, ஜப்பான் நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “அதிவேக புயல் கரையை கடக்கும்போது இன்னும் வேகம் பிடிக்கும். அப்போது வரலாறு காணாத மழையும் பெய்யும். கடல் சீற்றமும் அதிகமாக இருக்கும். எனவே ஒகினாவா தீவின் கரையோர பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் என்ற அதிவேக புயல் தாக்கியதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.