Home அவசியம் படிக்க வேண்டியவை துபாயில் உருவாகி வரும் பிரம்மாண்ட வர்த்தக நகரம்!

துபாயில் உருவாகி வரும் பிரம்மாண்ட வர்த்தக நகரம்!

672
0
SHARE
Ad

dubais-climate-controlled-city-largest-mallதுபாய், ஜூலை 8 – உலகின் முதல் குளிரூடபட்ட நகரம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் துபாய் அரசு தயாராகி வருகின்றது.

சுமார் 46 மைல்கள் பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்த நகரம் வர்த்தகத்திற்காகவும், சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகவும் பிரத்யேகமாக உருவாகப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நகரில் சுமார் 4 மைல்கள் பரப்பளவில் கடை வீதிகளும், அதிநவீன திரை அரங்குகளும், பல்வேறு கட்டமைப்புகளுடன் கூடிய வீடுகளும் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக இவை அனைத்துமே ஒரே கூரையின் கீழ் முழுவதும் குளிரூட்டபட்ட வசதி செய்யப்பட உள்ளது தனிச் சிறப்பாகும்.

#TamilSchoolmychoice

dubai-shopping-mall-sj

சுற்றுலா பயணிகளின் மூலம் வருவாயை பெருக்குவதில் அதிக அக்கறை காட்டும் துபாய் அரசு, இந்த புதிய நகரம் அமைக்கப்பட்டால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதன்  தொடக்கவிழாவில் கலந்து கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டூம் கூறுகையில், “கலாச்சாரம், பொருளாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் துபாய் நாட்டை மேம்படுத்துவதற்காக இந்த வணிக நகரம் அமைக்கப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.

இத்திட்டத்தை உருவாக்கிய துபாய் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைவர் முகமது அப்துல்லா கூறுகையில், “இந்த அதிநவீன நகரில் அனைத்து வசதிகளும் உள்ளதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாரம் முழுவதையும் இங்கேயே செலவழிக்கலாம்” என்று கூறியுள்ளார்.