Home கலை உலகம் மனைவி ஐஸ்வர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கமாட்டேன் – தனுஷ்

மனைவி ஐஸ்வர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கமாட்டேன் – தனுஷ்

509
0
SHARE
Ad

aishwaryaசென்னை, ஜூலை 8 – தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் பிரபல நடிகராகிவிட்டார் தனுஷ். தற்போது இவர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து பாலிவுட்டில் அமிதாப்பட்சன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் மீண்டும் உங்கள் மனைவி இயக்கும் படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு பதிலளிக்கையில், ‘ஐஸ்வர்யா இயக்கும் படங்களை தயாரிப்பேன்.

danush2நடிக்கும் எண்ணம் இல்லை. தற்போது அமிதாப்புடன் இந்திப் படத்தில் நடிக்கிறேன். ராஞ்சனாவில் கஷ்டப்பட்டு இந்தி பேசினேன். இந்தப் படத்தில் அந்த வாய்ப்பு இல்லை. காரணம் இதில் நான் வாய் பேச முடியாதவனாக நடிக்கிறேன்.

#TamilSchoolmychoice

அமிதாப் பச்சன் “சார்” என்னை பிரேசில் கால்பந்து வீரரோடு ஒப்பிட்டு பேசினார். அதற்காகவே பிரேசில் அணி உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.