Home உலகம் போயிங் விமானத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைத்த நாசா!

போயிங் விமானத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைத்த நாசா!

478
0
SHARE
Ad

nasaவாஷிங்டன், ஜூலை 8 – பறக்கும் ஜெட் விமானத்தில் ஆய்வு மையம் ஒன்றை வெற்றிகரமாக அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, நட்சத்திரங்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆய்வு மையம் ஒன்றை ஜெட் விமானத்தில் கட்டமைத்துள்ளது. இதில் சுமார் 17 டன் எடையுள்ள சோஃபியா என்ற தொலைநோக்கி ஒன்றும் உள்ளதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- “நட்சத்திரங்களைப் பற்றிய பிரத்யேக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக  அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஒரு போயிங் 747 ரக ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த மையத்தில் 17 டன் எடை மற்றும் 8 அடி நீளமுள்ள தொலைநோக்கி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.” “தொலைநோக்கியை தரையில் இருந்து பயன்படுத்தும் போது, காற்று மண்டலத்தில் காணப்படும் தூசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நட்சத்திரங்களை தெளிவாக காணமுடியவதில்லை.

அதனால் இந்த பறக்கும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. எதிர்வரும் 2015-ம் ஆண்டு முதல் இந்த பறக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தனது ஆராய்ச்சியை  நாசா தொடங்க உள்ளதாகக்  கூறப்படுகின்றது.