புருசல்ஸ, ஜூலை 8 – உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி கால் இறுதி ஆட்டம் வரை வந்த ஐரோப்பியக் கண்டத்தின் பெல்ஜியம் நாட்டுக் குழுவினர், கால் இறுதி ஆட்டத்தின் போது அர்ஜெண்டினாவிடம் தோல்வி கண்டனர்.
அதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய பெல்ஜியம் குழுவினரைப் பாராட்டி பெல்ஜியம் நாட்டின் மன்னர் பிலிப் அரசரும், இராணி மதில்டாவும் நேற்று அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
பெல்ஜியம் நாட்டின் விளையாட்டாளர் அக்செல் விட்செல் அரச தம்பதியினருடன் கைகுலுக்குகின்றார்.
படங்கள் : EPA
Comments