Home இந்தியா முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்குபெற்ற ஒலிம்பியா ஜெய்யின் ‘கட்டழகுக் கைகள்’ புத்தக அறிமுக விழா!

முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்குபெற்ற ஒலிம்பியா ஜெய்யின் ‘கட்டழகுக் கைகள்’ புத்தக அறிமுக விழா!

1980
0
SHARE
Ad

unnamed (43) (1)சென்னை, ஜூலை 9 – உலக நாயகன் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும், பிரபல ‘எனர்ஜி’ உடற்கட்டு மாத இதழின் ஆசிரியருமான ஒலிம்பியா ஜெய் அவர்களின், ‘கட்டழகுக் கைகள்’ புத்தக அறிமுக விழா கடந்த வாரம் ஜூன் 30 -ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒலிம்பியா ஜெய்யின், ‘நெக்ஸ்ட் நியூட்ரிஷன்’ நிறுவனத்தின் ‘பாடிபில்டிங்க் அண்ட் ஃபிட்னஸ் சப்ளிமென்ட்ஸ்’ அறிமுகம், இந்தியாவின் மிகச் சிறந்த உடற்கட்டு தமிழ் மாத பத்திரிக்கையான ‘எனர்ஜி’ இதழ் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு மற்றும் கட்டழகுக் கைகள் புத்தகத்தின் மூன்றாம் பதிப்பு ஆகியவற்றை ஒன்றாக அனுசரித்து முப்பெரும் விழாவாக இந்த விழா நடத்தப்பட்டது.

இந்த முப்பெரும் விழாவில் பிரபல இயக்குநர்களான சேரன், தங்கர்பச்சான், நடிகை மும்தாஜ், நடிகர் மதன்பாப் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

unnamed (56)

உடற்பயிற்சி துறையில் பல வருடங்களாக ஈடுபட்டு, பல்வேறு கட்டுரைகளையும், ஆராய்ச்சிகளையும் செய்து வரும் ஒலிம்பியா ஜெய், உடற்பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சியாளர்களுக்கான உணவு முறைகள் ஆகியவைகள் பற்றி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பயிற்சி பெற்றவர்.

மேலும், ஒலிம்பியா ஜெய், ‘சென்னை ஆணழகன்’, ‘தமிழ்நாடு ஆணழகன்’, ‘தென்னிந்திய ஆணழகன்’ உட்பட பல்வேறு ஆணழகன் பட்டங்களை வென்றவர். இந்தியாவின் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடங்களில் ஒன்றான திருப்பூரின் எனர்ஜி ஃபிட்னஸ் ஸ்டுடியோவின், ஃபிட்னஸ் டைரக்டரும் ஆவார்.

unnamed (66)

தனது இத்தனை வருட உடற்பயிற்சி அனுபவங்களைக் கொண்டு, பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து ஆணழகர்களின் பிரத்யேக கைகள் வளர்ச்சிக்கென இந்த 300 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தமிழில் எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தில் உலக அளவிலான முன்னணி ஆணழகர்களின் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன், கைகளுக்கு முறையான பயிற்சி அளிப்பது குறித்தும், அதற்கேற்ற உணவு உட்கொள்வது குறித்தும் பயனுள்ள தகவல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

unnamed (46)

‘ஆளவந்தான்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடிகர் கமல்ஹாசனின், பிரம்மாண்டமான ராட்சஷ தோற்றத்திற்கு பின்புலமாக இருந்து, அவருக்கு பயிற்சி அளித்தவர் ஒலிம்பியா ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது.

Olympia Jay

(கமல்ஹாசனின் வீட்டில் உள்ள உடற்பயிற்சி அறையில் கமலுக்கு ஒலிம்பியா ஜெய் பயிற்சி அளிக்கும் சமயத்தில் எடுக்கப்பட்ட படம்)

இந்த ‘கட்டழகு கைகள்’ புத்தகத்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 500 ரூபாய் ஆகும் (அமெரிக்க டாலர் மதிப்பில் 12$). வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த புத்தகத்தை தபால் வழியாகவும் பெறலாம். புத்தகத்தின் விலையோடு தபால் செலவுகள் மற்றும் இதர செலவுகள் இருப்பின் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் விபரங்களுக்கு கீழ் காணும் எண்களைத் தொடர்பு கொள்ளவும்:-

சிவா: +919841632779

ஸ்ரீனிவாசன்: +918925896912 மற்றும் +919789047456

-ஃபீனிக்ஸ்தாசன்