Home உலகம் சோமாலிய அதிபர் மாளிகையின் மீது தீவிரவாத தாக்குதல்!

சோமாலிய அதிபர் மாளிகையின் மீது தீவிரவாத தாக்குதல்!

688
0
SHARE
Ad

somaliமொகடிஷு, ஜூலை 9 – சோமாலியா அதிபர் மாளிகை மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரால் மோதி தாக்குதல் நடத்தி உள்ளனர். தாக்குதலின் போது பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது.

வறுமை, கடல் கொள்ளையர்கள் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியா, தற்போது படிப்படியாக ஜனநாயகத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகின்றது.

somaliya_22இந்நிலையில் தங்கள் ஆளுமையின் கீழ் அந்நாட்டை கொண்டு வர நினைக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகள், பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த சில நாட்களுக்கு முன்னர், வெடிகுண்டுகள் நிரப்பிய காரில் வந்த தீவிரவாதிகள் ஐந்து பேர், அதிபர் மாளிகையின் மீது காரை மோதி வெடிக்கச் செய்தனர். எனினும் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த படையினர், காரில் வந்த போராளிகளை சுட்டுக்கொன்று, அதிபருக்கு ஆபத்து நேராமல் தடுத்தனர்.

somaliyaa.கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது நாடாளுமன்ற வளாகம் மீது தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.