கோலாலம்பூர், ஜூலை 9 – இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு,இந்தி,மலையாளம் போன்ற வேற்று மொழிப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது.ஆனால் இவ்வாறான படங்கள் பார்க்கும் பொழுது நாம் எதிர்நோக்கும் பிரச்சனை என்னவென்றால் சப்டைட்டில் இல்லாதது.
இதற்கு தீர்வாக இணையத்தில் சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிபடங்களுக்கு சப்டைட்டில்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
2. http://www.open-subtitle.org/
3. http://www.moviesubtitles.org/
உங்களுக்குத் தேவையான சப்டைட்டிலை பதிவிறக்கம் செய்துவிட்டு அந்த படத்தின் பெயரை சப்டைட்டிலுக்கும் பெயர் மாற்றம் (Re-name) செய்து விட்டால் படத்தை பார்க்கும் போது தானாக வந்து விடும்.
உதாரணமாக:
படப்பெயர்- Dookudu.avi
சப்டைட்டில் பெயர்- Dookudu.srt என்று எழுத வேண்டும்.
இல்லாவிட்டால் விஎல்சி மீடியா ப்ளேயரில் படத்தினை திறந்து விட்டு மெனுவில் Video ->Subtitles Track -> Open File என்று அழுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்து சப்டைட்டிலை தேர்வு செய்தால் போதும் படத்தை சப்டைட்டலுடன் பார்க்கலாம்.