Home நாடு பிகேஆர் தேர்தல்: துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் அஸ்மின் அலி முன்னிலை!

பிகேஆர் தேர்தல்: துணைத்தலைவர் பதவிக்கான போட்டியில் அஸ்மின் அலி முன்னிலை!

595
0
SHARE
Ad

Khalid-&-Azmin-Ali 300 x 200பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 – பிகேஆர் கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் நடப்பு துணைத்தலைவரான அஸ்மின் அலி, சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட் இப்ராகிமிக்கு எதிராக 3,458 வாக்குகள் பெரும்பான்மையில் முன்னிலை வகிக்கிறார்.

கடந்த ஜூன் 28 -ம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப் பூர்வ தேர்தல் முடிவுகளில், அஸ்மின் அலி 21,066 வாக்குகளும், காலிட் இப்ராகிம் 17,608 வாக்குகளும், பிகேஆர் பொதுச்செயலாளர் டத்தோ சைபுடின் நாசுசன் 9,944 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், அந்த முடிவுகளில் கெலானா ஜெயா, பூச்சோங் மற்றும் பென்சியாங்கான் தொகுதிகளின் முடிவுகள் சேர்க்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

இதனிடையே, கெலானா ஜெயா மற்றும் பூச்சோங் தொகுதிகளில் வரும் ஆகஸ்ட் 10 -ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே வேளையில், பென்சியாங்கன் தொகுதி முடிவுகள் இன்னும் அக்கட்சியால் உறுதி செய்யப்படவில்லை.