Home வாழ் நலம் மன அழுத்தத்தினால் காச நோய் வர வாய்ப்பு!

மன அழுத்தத்தினால் காச நோய் வர வாய்ப்பு!

687
0
SHARE
Ad

Stressed woman in officeஜூலை 8 – காச நோய் என்றால் என்ன? மூளையில் சுரக்கும் செர்டோனின், டொப்பமின் ஆகிய வேதிப் பொருட்களில் ஏற்படும் மாற்றத்தினால் நமது உடலில் ஹார்மொன்களில் மாற்றத்தை உண்டாகும்.

இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி எப்போதெல்லாம் குறைகிறதோ, அப்போதெல்லாம் காச நோய் போன்ற நோய்களுக்கான கிருமிகள் வீரியம் பெறத் தொடங்குகிறது.

Mobile-worker-stress-managementஇவ்வகையான நோய் காற்றின் மூலம் பரவும் தன்மைக் கொண்டது. மேலும், நோய் உள்ளவர்களுக்கு தும்மல், எச்சில், இருமல் மூலமாகவே பிறருக்குப் பரவுகிறது. மன அழுத்ததிற்கும் காச நோய் வருவதற்கும் உள்ள தொடர்புகள் என்ன என்பதனை காண்போம்.

#TamilSchoolmychoice

அசுரத்தனமாக ஓடும் இந்த உலகத்துடன் ஈடாக ஓட முடியாதவர்கள் மனதளவில் தளர்ந்துவிடுகின்றனர். இதனால், மன அழுத்ததிற்கு ஆளாகின்றார்கள்.

Screen-shot-2013-02-10-at-12.17.52-AMஉறவினர் மரணம், விவாகரத்து, விபத்துகள், வேலை பழு, பாலியல் தொந்தரவு என்று இன்னும் பல காரணத்தாலேயே இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது எனலாம்.

மன அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளும் குறைந்துக் கொண்டே வரும். ஆகவே, காச நோய் நோய் வருவதற்கான மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிமுறைகளைக் கையாண்டால் தான், நோய் முற்றிலும் குணமடையும். மன அழுத்தத்தை வர விடாமல் தவிர்ப்பதே காச நோய் வராமல் தடுப்பதற்கான மிகப் பெரிய சிகிச்சையாகும்.

meditationதனிமையை தவிர்த்தல், மனம் விட்டுப் பேசுதல், தியானம், நல்ல புத்தகங்கள் வாசித்தல், கடற்கரை, பூங்கா போன்ற இடங்களுக்குச் சென்று மனதை அமைதிப்படுதும் செயல்களை மேற்கொண்டால் நாம் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். அப்பொழுதுதான், எந்த நோயயையும் எதிர்க்கும் சக்தி நம் உடலுக்குக் கிடைக்கும்.