Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண அதிர்ச்சி : ஜெர்மனி 5 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம்...

உலகக் கிண்ண அதிர்ச்சி : ஜெர்மனி 5 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம் முடிய)

578
0
SHARE
Ad

Germany's Thomas Mueller (2-R) celebrates after scoring the opening goal during the FIFA World Cup 2014 semi final match between Brazil and Germany at the Estadio Mineirao in Belo Horizonte, Brazil, 08 July 2014.பெலோ ஹோரிசோண்டே, ஜூலை 9 – உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின்  அரை இறுதி ஆட்ட வரிசையில் இன்று பிரேசில்-ஜெர்மனி களம் கண்டன.

இந்த ஆட்டத்தில் பிரேசில் நாட்டின் 200 மில்லியன் மக்களும்,உலகமெங்கும் உள்ள காற்பந்து இரசிகர்களும் அதிர்ச்சியில் உறையும் வண்ணம், ஜெர்மனி அடுத்தடுத்து 5 கோல்களை – அதுவும் முதல் பாதி  ஆட்டம் முடிவதற்குள்ளாகவே -அடித்து தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

நெய்மார் இல்லாத பலவீனத்தோடு, மிகவும் மோசமான தற்காப்பு ஆட்டத்தை பிரேசில் கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

அதன் காரணமாக அடுத்தடுத்து ஜெர்மனி விளையாட்டாளர்கள் கோல் அடித்து, பிரேசிலுக்கு வரலாறு காணாத தோல்வியை வழங்கியுள்ளனர்.

படம்: EPA