பெலோ ஹோரிசோண்டே, ஜூலை 9 – ஏறத்தாழ 12 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் – 2002ஆம் ஆண்டு – இன்று போலவே அந்த ஆண்டின் உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசிலும் ஜெர்மனியும் நேருக்கு நேர் விளையாடின.
2002ஆம் உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டம் அது. அன்றைக்கும் பிரேசில் குழுவுக்கு இதே பிலிப் சோலாரிதான் பயிற்சியாளராக இருந்தார்.
அந்த இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை 2-0 கோல் கணக்கில் வென்று ஐந்தாவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்று பிரேசில் சரித்திரம் படைத்தது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் ஜெர்மனி பயிற்சியாளர் ஜோசிம் லுயி (இடது) பிரேசில் பயிற்சியாளர் பிலில் சோலாரியுடன் (வலது)…..
அந்த கொண்டாட்ட தருணங்களை மீண்டும் இந்த ஆண்டு நிகழ்த்திக் காட்டலாம் என்ற எண்ணத்தோடு மீண்டும் அதே பிலிப் சோலாரியை பயிற்சியாளராகக் கொண்டு, உலகக்கிண்ண காற்பந்து போட்டிகளை ஏற்று நடத்தும் நாடாக – களமிறங்கிய பிரேசிலின் கனவுகள் இன்று காற்றோடு கரைந்தன.
ஜெர்மனி வரிசையாக – ஒன்றன் பின் ஒன்றாக ஏழு கோல்கள் அடித்து அதிர்ச்சியை ஏற்படுத்த, பிரேசில், ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது மட்டும் ஒரே ஒரு கோல் அடித்தது.
இன்று நடைபெறும் அர்ஜெண்டினா-நெதர்லாந்து நாடுகளுக்கு இடையிலான மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் வெல்லும் நாட்டுடன் இனி ஜெர்மனி இறுதி ஆட்டத்தில் மோதும்.
ஜெர்மனி – பிரேசிலுக்கு இடையிலான ஆட்டத்தின் படக்காட்சிகள்:-
படங்கள்: EPA