சென்னை, ஜூலை 9 – மதிமுக செயலாளர் வைகோ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இருதய பாதிப்பால் சிகிச்சைக்கு சேர்க்கபட்டுள்ளார்.
வைகோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைகோவின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது என தகவல் கூற மருத்துவர்கள் மறுக்கின்றனர்.
இந்நிலையில், அவருக்கு எந்த நோயும் இல்லை எனவும் அவர் நலமாக இருக்கிறார் எனவும் கட்சி தொண்டர்களும், கூட்டனிக்கட்சி தலைவர்களும், மற்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.