Home கலை உலகம் நயன்தாராவை கடத்துவேன் – விஜய் சேதுபதி!

நயன்தாராவை கடத்துவேன் – விஜய் சேதுபதி!

708
0
SHARE
Ad

vijay_sethupathiசென்னை, ஜூலை 9 – ‘பீட்சா’ படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய் சேதுபதி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘சூதுகவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ உள்ளிட் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 6 படங்களில் நடித்து வருகிறார்.

சூதுகவ்வும் படத்தில் ஒரு இளம்பெண்ணை காரில் விஜய்சேதுபதி கடத்த முயற்சிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த படத்தில் நடித்ததற்காக சென்னையில் நடந்த விஜய் விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதிக்கும் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற மேடைக்கு வந்த அவரிடம் சினிமாவில் உள்ள நடிகைகளில் ஒருவரை கடத்த விரும்பினால் யாரை கடத்துவீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாராவை கடத்துவேன் என்று உடனடியாக பதில் அளித்தார். இது கூட்டத்தினர் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. நயன்தாரா தமிழில் தொடர்ந்து முன்னணி நடிகையாக உள்ளார்.

#TamilSchoolmychoice

விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் என பெரிய கதாநாயகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கிறார். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் விஜய்சேதுபதி போன்ற நடிகர்களுக்கு இருக்கிறது.

ஆனால் நயன்தாரா கூடுதலாக வாங்கும் சம்பளம் சிறு படத்தின் பட்ஜெட், சிறு படங்களில் நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதி என்ற முத்திரை உள்ளிட்ட பல காரணங்கள் தடங்கல்களாக உள்ளன. அந்த ஆதங்கத்திலேயே நயன்தாராவை கடத்துவேன் என்று விஜய் சேதுபதி பேசியதாக கூறப்படுகிறது.