Home நாடு வைரமுத்து மணிவிழா : மலேசியா சார்பாக டத்தோ சரவணன் பாராட்டுரை

வைரமுத்து மணிவிழா : மலேசியா சார்பாக டத்தோ சரவணன் பாராட்டுரை

843
0
SHARE
Ad

vairamuthu (1)கோலாலம்பூர், ஜூலை 11 – எதிர்வரும் ஜூலை 13ஆம் நாள் தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் கலை, இலக்கிய விழாவாக கவிப்பேரரசு வைரமுத்துவின் 60ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகின்றது.

இந்த நிகழ்ச்சியினை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வைரமுத்துவின் இலக்கிய இரசிகர்களும், நெருங்கிய நண்பர்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.

வைரமுத்து மணிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் சில பிரபலமான பிரமுகர்கள் கலந்து கொண்டு வைரமுத்துவின் இலக்கியப் பணி குறித்து பாராட்டுரை வழங்குகின்றார்கள்.

#TamilSchoolmychoice

மலேசியா சார்பாக விளையாட்டுத் துறை துணை அமைச்சரும், ம.இ.காவின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ எம்.சரவணன் கலந்து கொண்டு பாராட்டுரை வழங்கவிருக்கின்றார்.

Datuk-M.-Saravananமலேசிய அரசியல் தலைவர்களில் தமிழ் இலக்கியத்திலும், இலக்கிய நிகழ்வுகளிலும் அதிகமான ஈடுபாடு கொண்டவர் டத்தோ சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.

சரவணன் மலேசியாவில் கண்ணதாசன் அறவாரியத்திற்கு தலைமைப் பொறுப்பேற்று ஆண்டுதோறும் கண்ணதாசன் பிறந்த நாளை கலை, இலக்கிய விழாவாகக் கொண்டாடுவதோடு, அந்த இயக்கத்தின் சார்பில் வேறுபல இலக்கிய நிகழ்வுகளையும் நடத்தி வந்துள்ளார்.

வைரமுத்துவின் மணி விழா குறித்து செல்லியல் தகவல் ஊடகம் தொடர்பு கொண்ட போது, அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றப் போவதை சரவணன் உறுதிப்படுத்தினார்.