Home கலை உலகம் உலகக் கிண்ண காற்பந்து: இறுதி போட்டியை காண பிரேசில் சென்றார் நடிகர் மோகன்லால்!

உலகக் கிண்ண காற்பந்து: இறுதி போட்டியை காண பிரேசில் சென்றார் நடிகர் மோகன்லால்!

865
0
SHARE
Ad

Mohanlal-bநெடும்பாசேரி,  ஜூலை 12 – உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியை கண்டு ரசிக்க நடிகர் மோகன்லால் பிரேசில் சென்றார். பிரேசில் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனி – அர்ஜெண்டினா மோத்துகின்றன.  இப்போட்டி நாளை (ஜூலை 13) நடக்கிறது.

இந்த போட்டியை உலகத்தில் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் நேரிலும் தொலைக்காட்சி மூலமும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகிறார்கள்.

தீவிர கால்பந்து ரசிகரான நடிகர் மோகன்லால், உலக கால்பந்து போட்டியை இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு ரசித்து வந்தார். இறுதிப்போட்டியை நேரில் பார்ப்பதற்கு அவர் விரும்பினார்.

#TamilSchoolmychoice

Germany-vs-Argentina-2014-World-Cup-Finalஅதைத் தொடர்ந்து, அவர் கொச்சியில் இருந்து எமி ரேட்ஸ் விமானம் மூலம் பிரேசிலுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்த விமானம் துபாய் வழியாக பிரேசிலை சென்றடைந்தது.

“பெருச்சாளி“ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த அவர், படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்திவைத்துவிட்டு, அவர் பிரேசிலுக்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் திரளான ரசிகர்கள் திரண்டிருந்து அவரை வழியனுப்பி வைத்தனர்.

argentina-alemania_07அப்போது மோகன்லாலிடம், “கால்பந்து போட்டியில் வெற்றி பெறுவது யார்?“ என ரசிகர்கள் சிலர் கேட்டனர். அதற்கு பதில் அளித்து மோகன்லால் கூறுகையில், “இப்போது என் மனம் எல்லாம் பிரேசிலையே சுற்றி வருகிறது. அங்குபோய் திரும்பியதும் எல்லாம் தெரிந்து விடும்.

நன்றாக விளையாடும் அணி நிச்சயம் வெற்றி வாகைச் சூடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை“ என்று கூறினார். தொடர்ந்து மோகன்லாலுக்கு ரசிகர்களும், நண்பர்களும் பயணம் வெற்றி பெற வேண்டும் என்று கூறி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.