பிரேசிலியா, ஜூலை 13 – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 4.00 மணிக்கு பிரேசிலின், பிரேசிலியா நகரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் நெதர்லாந்தும் பிரேசிலும் மோதின.
முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது நெதர்லாந்து 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தது.
நெதர்லாந்தின் அர்ஜன் ராபின் பினால்டி பகுதியில் பிரேசில் விளையாட்டாளர் டி.சில்வாவால் கீழே இழுத்துத் தள்ளப்பட, நெதர்லாந்துக்கு பினால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை நெதர்லாந்து தலைமை விளையாட்டாளர் (கேப்டன்) வான் பெர்சி கோலாக்கினார்.
பினால்டி வாய்ப்பை கோலாக்கிய மகிழ்ச்சியில் நெதர்லாந்தின் வான் பெர்சி…
தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் நெதர்லாந்து மற்றொரு கோலை போட்டது.
பிரேசில் ஆட்டம் அவ்வளவு மோசம் இல்லையென்றாலும் – கோல் அடிக்க பல தடவைகள் அவர்கள் முயன்றாலும் – முதல் பாதி ஆட்டம் முடிய பிரேசில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் திணறியது.
படங்கள்: EPA