Home இந்தியா இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சியளிக்கக் கூடாது – வைகோ

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சியளிக்கக் கூடாது – வைகோ

524
0
SHARE
Ad

vaikko-normalசென்னை, ஜூலை 16 – இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சியளிக்கக் கூடாது என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வைகோ சுட்டிக்  காட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, “இலங்கையின் வெளி விவகார அமைச்சர், மூன்று நாள் பயணமாக  இந்தியாவுக்கு வந்து, நமது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்ததாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமைகள் அழிக்கப்பட்டது பற்றியும், உண்மையைக் கண்டறிய உலக நாடுகள்  அக்கறையும் கவலையும் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இவ்வேளையில், இலங்கை அரசாங்கம் நீதிக்கான கதவுகளை நிரந்தரமாக மூட முடிவு செய்து விட்டதோடு,  இன்றைய இந்திய அரசாங்கத்தை ஏமாற்றி, உண்மைகளை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பொய்வேடம் போடுகிறது.

Vaiko,இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி அளிப்பதை, கட்சி வேறுபாடு இன்றித் தமிழ்நாடு எதிர்த்து வருகிறது. ஆனால், இலங்கை  இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுக்கப் போவதாக இப்போது வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி தருகிறது. இந்தியாவின் ஒற்றுமையிலும், ஒருமைப்பாட்டிலும்,  ஈடுபாடும் நம்பிக்கையும் வைத்திருக்கின்றோம்.

ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த கொடுந்துயரான துன்பமான பிரச்சனைக்கு இந்திய அரசால் நீதி  வழங்கப்படா விட்டால், தமிழர்கள் மனதில், குறிப்பாக இளைய தலைமுறையினர் மனதில் விரக்தியும் வெறுப்பும் ஏற்படும் என்பதை வேதனையோடு சுட்டிக்  காட்டுகிறேன்.

ஜெனீவா மனித உரிமைக் ஆணையக் கூட்டத்தில், ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் புரிந்த முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்  நிலைப்பாடுதான், இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அதிகாரபூர்வ நிலைப்பாடா? நியாயமான நல்ல நோக்கத்தோடு தங்களின் மேலான  கவனத்திற்காக இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன்.

தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய நடவடிக்கைளைத் தாங்கள் மேற்கொள்ள வேண்டுகிறேன்” என அந்த கடிதத்தில் கூறியுள்ளார் வைகோ.