Home இந்தியா மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு!

மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு!

619
0
SHARE
Ad

6th BRICS summit in Brazilபிரேசில், ஜூலை 16 – பிரேசிலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேசினார்.

ஃபோடாலிசாவில் நடைபெற்ற இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பேசிய பிரதமர் மோடி  இந்தியா, ரஷ்யா இடையிலான  சிறப்பு வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக கூறினார்.

பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, எரிசக்தி, வர்த்தகம்  முதலீடு உள்ளிட்ட துறைகளில் ரஷிய அதிபருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறிய மோடி, இந்தியா சுதந்திரம் பெற்ற தொடக்க காலத்தில் இந்தியாவின் பொருளாதார மேம்பாடு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் ரஷ்யா உதவி செய்ததை சுட்டிக்காட்டி பாராட்டினார்.

#TamilSchoolmychoice

டெல்லியில் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநாட்டை ஆவலுடன் எதிர்நோக்குவதாக அப்போது இரு தலைவர்களும் தெரிவித்தனர். புதினின் இந்தியா பயணத்தின் போது ரஷ்யா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தை பார்வையிட வரும்படி மோடி அழைப்பு விடுத்தார்.

6th BRICS summit in Brazilஇது நல்ல யோசனை என புதினும் தெரிவித்தார். அணுசக்தி திட்டம் இந்தியா, ரஷ்யா  உறவின் அடையாளமாக திகழ்வதாக புதின் அப்போது கூறினார்.

ஐ.நா. பாதுகாப்பு ஆணையம் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளில் சீர்திருத்தத் தேவை என புதின் வலியுறுத்தி பேசியதற்கு மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.