Home நாடு பாலஸ்தீனத்தில் நடக்கும் போர் மலேசியர்களுக்கு ஒரு பாடம்!

பாலஸ்தீனத்தில் நடக்கும் போர் மலேசியர்களுக்கு ஒரு பாடம்!

809
0
SHARE
Ad

palatineராவுப், ஜூலை 17 –  பாலஸ்தீனத்தில் நடக்கும் போர், மலேசியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என பகாங் மாநில சுல்தான் தெங்கு மஹ்கோத்தா தெங்கு அப்துல்லா அமாட் ஷா மக்களுக்கு நினைவுறுத்தினார்.

மலேசியர்களில் குறிப்பாக, இன வெறியுடன் வாழ்பவர்கள், பாலஸ்தீன நாட்டில் நடைபெறும் போரை பாடமாக கருதி, அந்த போர் இங்கு உருவாகாமல் தவிர்க்க வேண்டும் என்றும் அமாட் ஷா வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறியதாவது, போர் நாட்டில் அமைதியையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்துவிடும் என்றார். “நாம் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

israel-pounds-gazaகாரணம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, எந்த கட்டுப்பாடுகளும், போரும் இன்றி நம்மால் சுதந்திரமாக வாழ முடிகிறது. அதே வேளையில் நாம் எந்த ஒரு பயமும் இல்லாமல் இங்கு நம் மதத்தை பயிற்சி செய்ய முடிகிறது.” என்றும் சுல்தான் கூறினார்.

நேற்று முன்தினம் கம்போங் உலு சுங்காய் அனாதை குழந்தைகளுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நன்கொடை வழங்கும் நோன்பு திறக்கும் நிகழ்வில் சுல்தான் இவ்வாறு கூறினார்.