Home உலகம் ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும் – இந்தியா, பிரேசில் கோரிக்கை!  

ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும் – இந்தியா, பிரேசில் கோரிக்கை!  

556
0
SHARE
Ad

indian-flagபிரேசில், ஜூலை 17 – ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என இந்தியா, பிரேசில் நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபும் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

ஐ.நா. பாதுகாப்பு அமைப்பில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்த இரு நாடுகளும் கோரி வரும் சூழலில், ஐ.நா.விற்கான இந்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இந்தியா, பிரேசில் வர்த்தகம் மற்றும் நட்புறவு குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசியதாகவும், அப்போது ஐ.நா.பாதுகாப்பு அமைப்பில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி இரு நாட்டு தலைவர்களும் ஐ.நா.விடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜி 20 போன்ற சர்வதேச அமைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேளாண்துறை, பால் உற்பத்தி, மாற்று எரிசக்தி, விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, இணையதள பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது இந்திய செயற்கை கோள்களில் இருந்து வரும் தகவல்களை சேகரிக்க பிரேசிலில் தரைக் கட்டுப்பாட்டு அறை அமைப்பது, சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளித் துறைகளில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது போன்ற முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.