Home கலை உலகம் தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” உலக முழுவதும் 825 திரையரங்குகளில் நாளை வெளியீடு!

தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” உலக முழுவதும் 825 திரையரங்குகளில் நாளை வெளியீடு!

569
0
SHARE
Ad

Velai_illa_pattathari_119-smallசென்னை, ஜூலை 17 – தனுஷ் தயாரித்து, நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படம் தனுஷுக்கு 25-வது படம். இதில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக், சுரபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில், நாளை 18-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

velai-illa-pattathari,தமிழகத்தில் மட்டும் சுமார் 425 திரையரங்குகளிலும், மற்ற நாடுகளில் 400 திரையரங்குகளிலும் இப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர். இப்படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் வெளியிடுகிறார்.