இதனை கடுமையாக எதிர்த்த ஆறு பிரதான சிங்களக் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அறிக்கை நாட்டை துண்டாடும் செயல் என்று குற்றம்சாட்டின. மேலும் இதற்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தன.
இந்த ஆறு மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரித்து வந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து விளக்கம் கேட்டது.
தற்போது இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்து உள்ள அந்த அமைப்பு, “இலங்கையின் ஒற்றையாட்சி முறை ஏற்றுக்கொள்கிறோம். தனி நாடு கோரும் எண்ணம் தற்போது எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தற்போதய நிலைப்பாடு ஈழத்தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.