Home நாடு ரஷ்ய அதிபருக்கு விரித்த வலையில் எம்எச்17 விமானம் சிக்கியதா?

ரஷ்ய அதிபருக்கு விரித்த வலையில் எம்எச்17 விமானம் சிக்கியதா?

467
0
SHARE
Ad

mh17கோலாலம்பூர், ஜூலை18 – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சென்ற விமானத்தை தாக்க, கிளர்ச்சியாளர்கள் விரித்த வலையில் மலேசிய விமானம் எம்எச் 17 சிக்கி கொண்டதாகக் கூறப்படுகின்றது.

காரணம் இரண்டு விமானங்களிலும் சிவப்பு மற்றும் நீல நிற பட்டைகள் ஒரே விதமாக இருப்பதால், தவறுதலாக கிளர்ச்சியாளர்கள், எம்எச்17 விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்திவிட்டனர் என்றும் பிரபல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.

பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொண்ட பின்னர், ரஷ்ய அதிபர் விளாமிடின் புடின், தன் சொந்த நாட்டிற்கு அந்நாட்டு அரசாங்க விமானம் மூலமாக திரும்ப இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கிழக்கு உக்ரைன் அருகே எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 43 மலேசியர்கள் உட்பட 298 பேரும் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.