Home கலை உலகம் விஜய்கு ஜோடியாக நடிக்க முடியாது – தீபிகா படுகோன்!

விஜய்கு ஜோடியாக நடிக்க முடியாது – தீபிகா படுகோன்!

977
0
SHARE
Ad

deepika padukone,சென்னை, ஜூலை 17 – விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் மறுப்பு சொன்னதால், ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது சரித்திர கதை படமாக உருவாகிறது.

இதில் ஹன்சிகா இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். முதல் கதாநாயகியாக ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க சிம்புதேவன் விரும்பினார். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது.

பிரியங்கா, பாலிவுட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில் இருக்கிறார்.  இதனால் அவர் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

deepika-padukone-090813கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க சில காட்சிகளுக்காக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்து கொடுத்துவிட்டு போனார் தீபிகா படுகோன். அதனால் அவரை கேட்டால் விஜய்க்கு ஜோடியாக சம்மதம் சொல்வார் என படக் குழு நினைத்தது.

ஆனால் தமிழில் நடிக்க விரும்பவில்லை என தீபிகா ஜகா வாங்கிவிட்டாராம். அதனால் வேறு வழியில்லாமல் இப்போது ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக ஸ்ருதி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே படத்தில் நான் ஈ சுதீப், மாஜி கதாநாயகி ஸ்ரீதேவி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.