Home நாடு எம்எச்17 பேரிடர்: சீனாவில் இருந்து லியாவ் நாடு திரும்பினார்!

எம்எச்17 பேரிடர்: சீனாவில் இருந்து லியாவ் நாடு திரும்பினார்!

498
0
SHARE
Ad

liow-tiong-lai5-june7_400_267_100கோலாலம்பூர், ஜூலை 18 – எம்எச்370 விமானம் மாயமானது தொடர்பான விவகாரம் குறித்து சீன போக்குவரத்துத்துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்க, மலேசியாவின் புதிய போக்குவரத்துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய் நேற்று இரவு தான் பெய்ஜிங் சென்றார்.

பெய்ஜிங்கில் காலடி எடுத்து வைத்த சிறிது நேரத்தில், எம்எச்17 விமான பேரிடர் குறித்த தகவல் கிடைக்கவே, உடனடியாக இன்று காலை 7.30 லியாவ் தியாங் லாய் கோலாலம்பூர் திரும்பினார்.

இந்நிலையில், எம்எச் 17 விமானம் குறித்த செய்தியாளர் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில், கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

அதில் லியாவ் தியாங் லாய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.