இதற்கான திரைக்கதை வேலைகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார். எந்திரன்-2’ படத்துக்கான கதையைத் தீர்மானிக்க,கடந்த ஒரு வருடமாகவே மறைமுக வேலைகளில்’ ஈடுபட்டிருந்தார் இயக்குநர் ஷங்கர்.
“எந்திரன் 2” படத்தில் வில்லன் தோற்றத்தில் உள்ள ரஜினிக்கு பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் விரும்பினார். இதற்கான நடிகர் தேர்வு நடந்து வந்தது. தற்போது இந்தி நடிகர் அமீர்கானை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் ரஜினிக்கு நிகர் என்றால், அமிதாப், ஷாருக், அமீர்கான் ஆகியோர்தான். இதில் ‘சீனியர்’ அமிதாப்பை, ரஜினியுடன் மோதவைக்க முடியாது, ‘எந்திரன்’ கதையில் ஷாருக்கை நடிக்கக் கேட்க முடியாது. இது போன்ற காரணங்களால், ஒரே முடிவாக அமீர்கான் மட்டுமே இருக்கிறார்.
ரஜினிகாந்த் தற்போது லிங்கா படபிடிப்பில் உள்ளார்.’கோச்சடையான்’ வெளியாவதற்கு முன்னரே ‘லிங்கா’ படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்டார். இப்போது ‘லிங்கா’ முடியும் முன் ‘எந்திரன்-2’ படத்திற்கு உரிய தகவல்கள் கசிகின்றன. ஆகவே அவர் எந்திரன் 2-டில் நடிப்பார் என கூறப்படுகிறது.