அக்கூட்டத்தில், விமான பேரிடர் சம்பவத்திற்கு துக்கத்தை அனுசரிக்கும் பொருட்டு தேசிய கொடியை வரும் திங்கட்கிழமை வரை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் உத்தரவிட்டார்.
கிளர்ச்சியாளர்களின் இந்த மனிதாபிமானமற்ற, பொறுப்பற்ற, வன்முறையான பாதக செயலுக்கு நஜிப் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்று முழுமையான விசாரணை முடியும் வரை யார் மீது குற்றம் சாட்டமுடியாது என்றும் நஜிப் தெரிவித்தார்.
எனினும், இந்த பேரிடர் தொடர்பாக, ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு மலேசியா மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளது என்றும் நஜிப் குறிப்பிட்டார்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்புக் குழுவினரை அனுமதிப்பது, கிடைக்கும் ஆதாரங்கள் அனைத்தையும் சுயேட்சை ஆணையத்திடம் ஒப்படைப்பது மற்றும் இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவது ஆகிய மூன்று நிபந்தைகள் விதிக்கப்பட்டுள்ளதாக நஜிப் விளக்கமளித்தார்.