மும்பை, ஜூலை 19 – மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் 21வது தளத்தில் திடீரென தீ பற்றியது. இதை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 22 தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் மேல் தளத்தில் சிக்கினர்.
கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்கள் மீட்கப்பட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.மும்பையின் புறநகரான அந்தேரியில் உள்ள 21 தளங்கள் கொண்ட கட்டிடத்தின் 20-வது தளத்தில் நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டது.
2-வது தளத்துக்கும் தீ வேகமாக பரவியது. அதையடுத்து கட்டிடத்தில் பணிபுரிந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். மேல் தளத்தில் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் இருந்தபோது, மிகவும் வேகமாக காற்று வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
அதில் 22 வீரர்களும் சிக்கிக் கொண்டனர். அதையடுத்து உடனடியாக கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன.
இந்நிலையில் மழை பெய்ததால் தீயின் தாக்கம் குறைந்தது. 22 வீரர்களும் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் காயமடைந்தனர். மற்றவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.